close
Choose your channels

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் விக்ரம் நடிக்கின்றாரா?

Saturday, December 4, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிக்க வேண்டியது திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் தகவல் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பதும், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதையை முதலில் தளபதி விஜய்க்கு பா ரஞ்சித் கூறி இருந்ததாகவும் அந்தக் கதையில்தான் தற்போது விக்ரம் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது.

ஏற்கனவே விக்ரம் நடித்த ’தூள்’ படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்தார் என்பதும் அதன் பின் திடீரென அவர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதால் விக்ரம் நடித்தார் என்பதும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் நடிக்க வேண்டிய ஒரு படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz