close
Choose your channels

'துருவ நட்சத்திரம்' படத்திற்கு மீண்டும் திரும்பிய சியான் விக்ரம்.. சூப்பர் அப்டேட்..!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் மீண்டும் ’துருவ நட்சத்திரம்’ படத்திற்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரிகர்சல் செய்த போது சியான் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது ஓய்வு பெற்று வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் நடித்து முடித்து உள்ள இன்னொரு திரைப்படம் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் காட்சிகள் எடிட்டிங் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த ட்ரெய்லருக்கான டப்பிங் பணியை சியான் விக்ரம் தற்போது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜூலை 14ஆம் தேதி இந்த படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலரை ஜூன் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ட்ரெய்லரின் டப்பிங் பணியை தான் தற்போது விக்ரம் முடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.