close
Choose your channels

காஜல் அகர்வாலை முத்தமிட்டதற்கு இதுதான் காரணம்: ஒளிப்பதிவாளர் விளக்கம்

Thursday, November 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழில் 'பாரீஸ் பாரிஸ்' மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் அவர் தெலுங்கில் நடித்து வரும் படம் 'கவசம்

'கவசம்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவின்போது பொதுமேடையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டாநாயுடு திடீரென முத்தமிட்டார். இதனை காஜல் அகர்வால் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இதுவொரு பெரிய விவாதப்பொருள் ஆனது.

மேலும் #BanChotaKNaidu என்று இந்த விஷயம் சீரியசானதை அடுத்து இதுகுறித்து சோட்டா நாயுடு தற்போது விளக்கம் அளித்துள்ளார். 'காஜல் அகர்வால் மீதுள்ள மதிப்பில் இவ்வாறு செய்தேன். அவரோடு பல படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். சவுந்தர்யாவுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகை காஜல். ஒரு நடிகையாகத் தன் வேலையை சிறப்பாகச் செய்கிறார். எனவே, ஒரு ஈர்ப்பினால் அவரை முத்தமிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.