close
Choose your channels

கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் எவை எவை?

Tuesday, December 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொங்கல், தீபாவளியை அடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அதிகமாக வெளியாகும் தினம் கிறிஸ்துமஸ் திருநாள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளிலும் வழக்கம்போல் திரைப்படங்கள் ரிலீசுக்கு குவிந்துள்ளது.

டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நான்கு திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதியும் தனுஷின் 'மாரி 2', ஜெயம் ரவியின் 'அடங்கமறு', விஷ்ணுவின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் டிசம்பர் 21ஆம் தேதியும் ரிலீஸ் ஆகவுள்ளது.

அதவர்வாவின் 'பூமராங்' கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகும் என கூறப்பட்டாலும் இந்த படம் டிசம்பர் 28 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட்டியலில் சிவகார்த்திகேயனின் 'கனா' சேர வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.