close
Choose your channels

மகளிர் தினத்தில் மனைவியுடன் சேலன்ஜ்? நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட வேற லெவல் வீடியோ!

Tuesday, March 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று மகளிர் தினம் உலகம் முழுவதும் சிறப்பிக்கப் பட்டது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி ஒரு க்யூட் வீடியோவை வெளியிட்டு அதில் தன் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோவில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ஒரு சிறு உடற்பயிற்சியை சேலன்ஞ்சாக செய்து காட்டுகிறார். ஆனால் இந்த சேலன்ஞ்சில் ஜெயம் ரவி தோற்றுப் போய்விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேற லெவல் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவுடன் “பெண்கள் எதையும் செய்ய முடியுமா? உங்கள் அன்புக்குரியவருடன் இதை முயற்சிக்கவும்! நீங்கள் வலுவான பெண்கள்… அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட இந்தக் கருத்துகளும் தற்போது ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியின் 25 ஆவது திரைப்படமாஉ “பூமி” டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்குநர் லக்ஷ்மன் இயக்கி இருந்தார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் சேலன்ஞ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.