ஐதராபாத் என்கவுண்டர்: ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா, வரலட்சுமி கூறியது என்ன?

ஐதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வர் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இதுகுறித்து பொதுமக்கள், சமூக வலைதள பயனாளர்கள், பெண்ணியவாதிகள்,, தேசிய மனித உரிமை கமிஷன், அரசியல்வாதிகள் மற்றும் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் இது குறித்து தங்கள் கருத்துக்களை சமூக வலை தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ், நடிகைகள் சமந்தா மற்றும் வரலட்சுமி ஆகியோர் இது குறித்து கூறிய கருத்துக்களை தற்போது பார்ப்போம்.

ஏ.ஆர்.முருகதாஸ்: ஐதராபாத் காவல்துறை அதிகாரிகளுக்கு எனது சல்யூட். நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பையும் இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என நம்புகிறேன்.

நடிகை சமந்தா: பயம் ஒன்றே குற்றம் நடப்பதை தடுக்கும் வழி. சிலசமயம் இது ஒன்றுதான் ஒரே தீர்வு.

நடிகை வரலட்சுமி: டாக்டர் சகோதரின் ஆத்மா சாந்தி அடையும் என நம்புகிறேன். நீதி வென்றது. பாலியல் குற்றம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவொரு பாடமாக இருக்கும்.
 

More News

போலீஸ் உடையில் சென்று இளம்பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலி: சென்னையில் பரபரப்பு

சென்னை தி நகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை போலீஸ் உடையில் மிரட்டிய பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தாடி வைத்திருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6.67 லட்சம் இழப்பீடு.

தாடி வைத்திருந்த காரணத்திற்காக வேலை கொடுக்க மறுத்த நிறுவனம் ஒன்று, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம்

சட்டத்தின் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கமல் கட்சி அறிக்கை

ஐதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து

கஞ்சா போதை.. பெண்ணிடம் சில்மிஷம்.. அடித்து உதைத்த பொதுமக்கள்.

சென்னையில் போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற இளைஞர்களை பொது மக்கள் அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த ஆரம்பத்தில் காமெடி கலந்த ரொமான்ஸ் திரைப்படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்',