பிரபல இயக்குனர் - ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார். அவர் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்தாலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிகிறது.

கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு குறிப்பாக 'சட்டம் என் கையில்', 'கல்யாண ராமன்', 'கடல் மீன்கள்', 'மீண்டும் கோகிலா', 'சங்கர்லால்', போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள என்.கே.விஸ்வநாதன், 'இணைந்த கைகள்', 'நாடோடி பாட்டுக்காரன்', 'பெரிய மருது', உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு நமீதா நடித்த 'ஜகன்மோகினி' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

என்.கே.விஸ்வநாதன் அவர்கள் மரணத்திற்கு கோலிவுட் பிரமுகர்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

More News

டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஒருங்கிணைந்த அதிமுகவின் சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில், டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை செய்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.

முழு அடைப்பு போராட்டம் மக்களுக்கு மட்டும்தானா?

விவசாயிகளுக்காக திமுக தலைமையில் அரசியல் கட்சிகள் நடத்திய இன்றைய முழு அடைப்பு போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது

தினகரனை யார் என்றே தெரியாது! முன்னுக்கு பின் முரணாக பேசும் சுகேஷ் சந்திரசேகர்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தது குறித்த வழக்கு ஒன்றில் டிடிவி தினகரனிடம் நான்காவது நாளாக இன்று விசாரணை நடந்து வருகிறது.

டிடிவி தினகரன் கைது எப்போது? நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் பதில்

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை. ஓபிஎஸ் முக்கிய தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் முதல்வர் பதவியேற்று ஆட்சியை நடத்தி கொண்டிருந்தார்.