ஆசையாக வளர்த்த மலைப்பாம்பால் நேர்ந்த சோகம்! துடிதுடித்து இறந்த இளைஞர்!

  • IndiaGlitz, [Sunday,May 05 2019]

சர்க்கஸ் காட்டிய போது, இளைஞர் ஒருவர் சாகசத்திற்கு பயன்படுத்திய மலைப்பாம்பு அவருடைய கழுத்தை இறுக்கியதில், மூச்சி திணறி சர்க்கஸ் காட்டிய இளைஞர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டாஜெஸ்டன் என்ற பகுதியில், சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றை சிறிய அளவில் நடத்தி வருகிறார். இதற்காக உரிய அனுமதி பெற்று, மலைப்பாம்பு, யானை, கிளிகள், ஆகியவற்றை அவர் வளர்த்து வந்துள்ளார்.

அந்த வகையில் எப்போதும்போல் சர்க்கஸ் நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டபோது, மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி எடுத்து சாகசம் காட்டினார். திடீரென கழுத்தில் சுற்றி இருந்த பாம்பு அவருடைய கழுத்தை இறுக்கியது.

மலைப்பாம்பு கழுத்தை இறுக்கிய உடன், பாம்பை எடுத்த முயற்சி செய்தார் ஆனால் அவரால் அது முடியவில்லை. நொடி பொழுதில், கீழே விழுந்து மூச்சுத்திணறி அவர் உயிரிழந்தார்.

சர்க்கஸ் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஆரம்பத்தில் அவர் நடிக்கிறார் என நினைத்த நிலையில், பின் அவர் இறந்த விஷயத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.