தரை லோக்கலாக இறங்கிய காயத்ரி. தராதரத்துடன் ஒதுங்கிய ஓவியா

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒருவாரம் மட்டுமே டீசண்டாக இருந்த காயத்ரி அதன்பின்னர் அவருடைய சுயரூபம் வெளிப்படும் வகையில் நடந்து கொண்டு அனைவரின் வெறுப்பிற்கும் ஆளாகி வருகிறார்.

முதலில் ஆர்த்தியுடன் இணைந்து புறம் பேசிய காயத்ரி, ஆர்த்தி வெளியேறியவுடன் தனியாகவும், நமீதாவுடன் இணைந்தும் பிக்பாஸ் குடும்பத்தின் ஒற்றுமையை குலைக்கும் வேலையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜூலியை ஆத்திரத்துடன் நேரில் திட்டியும், ஓவியாவை அவர் இல்லாத போதும் திட்டிய காயத்ரி, இன்றைய புரமோ வீடியோவில் ஓவியாவிடம் நேரடியாக சண்டை போட்டுள்ளதாக காண்பிக்கப்படுகிறது. 'என்னால் உங்கள் பெயர் கெட்டு போய்விட வேண்டாம், உங்களுக்கு நல்ல பெயர் உள்ளது' என்று ஓவியா டீசண்டாக சொல்ல, அதற்கு காயத்ரி படுகேவலமான ஒரு ரியாக்சனை வெளிப்படுத்தியதோடு, 'மூஞ்சியும் மொகரக்கட்டையும்' என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார். இதனால் மேலும் சண்டையை பெரிதாக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் தராதரம் கருதி ஓவியா எழுந்து செல்வது போல் இன்றைய வீடியோ முடிந்துள்ளது.

எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு விறுவிறுப்பான சண்டையை நேயர்கள் எதிர்பார்க்கலாம்.

More News

தனுஷின் 'விஐபி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்...

தல அஜித்தின் விவேகம்: கபிலன் வைரமுத்துவின் 'காதலாடா' பாடல் வரிகள்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் இடம்பெற்ற 'சர்வைவா' மற்றும் 'தலை விடுதலை' ஆகிய பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளிவந்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது...

ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா! ஒருமையில் பேசிய அமைச்சருக்கு கமலின் நக்கல் பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசின் ஊழல் குறித்து பேசி வருவதால் அவரை மிரட்டும் தொனியிலும், ஒருமையிலும் ஒருசில அமைச்சர்கள் பேசி வந்தனர். இதற்கு கமல்ஹாசன் ரசிகர்களும் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கமல் தனக்கே உரிய நக்கலுடன் இதற்கு பதிலளித்துள்ளார்...

முடியாவிட்டால் விலகி கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் ஆலோசனை

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை தனது டுவிட்டர் மூலமும் பேட்டியின் மூலமும் கூறி வருகிறார்...

ரஜினி முதல்வர், கமல் துணை முதல்வர்: அஜித், விஜய் ஆதரவு கொடுக்க வேண்டும்: எஸ்.வி.சேகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஆகிய இருவருமே கூடிய விரைவில் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதற்கான சூழல் கடந்த சில நாட்களாக உள்ளது. இருவரும் தனித்தனியாக அரசியலில் குதிப்பார்களா? அல்லது இணைந்து பணியாற்றுவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது....