ஏரி அருகே ராட்சத பாறை விழுந்து விபத்து: 20 பேர் மாயம்!

  • IndiaGlitz, [Sunday,January 09 2022]

ஏரி அருகே ராட்சஸ பாறை திடீரென சரிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் 20 பேர் மாயமாகி விட்டதாகவும் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு பிரேசிலில் உள்ள பர்னாஸ் என்ற ஏரிக்கு தினந்தோறும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த ஏரி அருகே உள்ள பிரமாண்ட பாறைகள் இருப்பதால் படகுகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாறை அருகே சென்று பாறைகளின் அழகை கண்டு ரசிப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று சுற்றுலா பயணிகள் மூன்று படகுகளில் பாறையின் அருகே சென்று பாறையின் அழகை ரசித்து கொண்டிருந்தபோது திடீரென பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இந்த பாறை இரண்டு படகுகளில் மேல் விழுந்ததால் அந்தப் படகுகளில் இருந்த சுற்றுலா பயணிகளில் 20 பேர் மாயமானதாகவும் ஐந்து பேர்களின் உடல் இதுவரை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 32 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பாறையின் அழகை சந்தோஷமாக பார்த்து ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மக்களால் தேர்வு செய்யப்பட்ட 4வது இறுதிப்போட்டி வேட்பாளர்: கமல் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே 3 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நான்காவது இறுதி போட்டியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

குப்பையில் கண்டெடுத்த 9 சவரன் நகை: தூய்மைப்பணியாளரின் நேர்மைக்கு பாராட்டு!

சென்னையை சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் குப்பையில் 9 பவுன் நெக்லஸ் ஒன்றை கண்டெடுத்த நிலையில் அதனை அவர் நேர்மையாக உரியவரிடம் ஒப்படைப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

நடிகர் மகேஷ்பாபு வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்ச்சியை காரணமாக திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் 'என்ன சொல்லப்போகிறாய்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்: கொடுப்பது எந்த பல்கலை தெரியுமா?

நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க பிரபல பல்கலைக் கழகம் ஒன்று முன் வந்துள்ளதை அடுத்து சிம்புவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.