சென்சாரை தாண்டி clubhouseஇல் நடக்கும் ஆபாசக் கூத்து… பதறும் ஆர்வலர்கள்!

  • IndiaGlitz, [Saturday,June 19 2021]

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாம் போர் அடிச்சி போச்சு… இதனால் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பிய நம்ம இளசுகள் தற்போது clubhouse எனும் புது செயலியில் மணிக்கணக்காக அரட்டை அடித்து வருகின்றனர். சரி, கொரோனா நேரத்தில் இதுவும் ஒரு பொழுதுபோக்காக இருந்துவிட்டு போகட்டுமே எனக் கருதினாலும் இந்த clubhouseஇல் நடக்கும் அவலத்தை குறித்து தற்போது சமூகநல ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

clubhouse என்பது மற்ற சமூகவலைத் தளங்களைப் போன்று (மல்டி பயன்பாடு) இல்லாமல் வெறும் ஆடியோ லைவ் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு வெளிநாடுகளில் IOS யூசர்களுக்காக பல ஆண்டுகளாகவே இந்த செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதைத்தவிர Twitter spaceலும் இதேபோன்ற சேவை இருந்தாலும் clubhouse ஆப் தற்போது எளிமையான வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

மேலும் clubhouseஇல் நூற்றுக்கணக்கான வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளின் பெயர்களைப் பார்த்துவிட்டு ஒரு வாடிக்கையாளர் அதை தேர்வு செய்து கொள்ளலாம். ஒருவேளை மற்றவர்களுடன் பேச வேண்டும் என நினைத்தாலோ அல்லது தனது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என நினைத்தாலோ Hand Raise செய்து பேசமுடியும். தனக்கு என புதிதாக ஒரு வீட்டையும் உருவாக்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரே நேரத்தில் பலருடன் நேரடியாக ஆடியோ வடிவில் எளிதாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ஆப்பில் தற்போது ஆபாசப் பேச்சுகளும் வரைமுறையே இல்லாத உரையாடல்களும் நிகழ்ந்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

கூடவே இந்தச் செயலியில் இருக்கும் தரவுகளைக் குறித்த பாதுகாப்பு அக்கறையையும் சிலர் எழுப்பி வருகின்றனர். காரணம் ஆடியோ வடிவில் இருக்கும் தரவுகளை யார் வேண்டுமானாலும் கேட்க முடியும். கூடவே அதை ரெக்கார்டு செய்து கொள்ளவும் முடியும். ஆனால் இந்த ஆடியோக்களை மற்ற சமூகவலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என்பது போன்ற விதிமுறைகளும் இருக்கிறது. ஆனாலும் சில யூடியூபர்கள் தற்போது இந்த ஆடியோக்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர சீனா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளும் clubhouse செயலியை பாதுகாப்பு இல்லாதது எனக் கூறி தடை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பாதுகாப்பே இல்லாத ஒரு செயலிதான் தற்போது இந்தியாவில் படு வைரலாகி வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த செயலி வழியாக 1.3 மில்லியன் மக்களின் தரவுகள் லீக்கானதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டது. பின்பு அது தவறான தகவல் என்பது போன்ற செய்திகளும் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் clubhouse எனும் செயலியை சிலர் நல்ல உரையாடல்களுக்காகவும் விவாதத்திற்காகவும் பயன்படுத்தியும் வருகின்றனர். இதுபோன்ற விஷயங்கள் வரவேற்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சீனாவில் தடை செய்யப்பட்ட ஒரு செயலியைக் குறித்து சற்று எச்சரிக்கையாக இருப்பதும் நலம். கூடவே இதுபோன்ற செயலிகள் ஒரு கட்டத்தில் உளவியல் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்றும் சில ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

More News

தனுஷ்-சேகர் கம்முலா படத்தில் இவர் தான் நாயகியா? மீண்டும் ஒரு சாதனை?

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று அவர் நடிக்கயிருக்கும் இன்னொரு படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தேசிய விருது பெற்ற தனுஷ்,

ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்...! தக்க செருப்படி கொடுத்த நடிகை....!

தன்னுடைய அந்தரங்க உறுப்புகள் குறித்து, நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு நடிகை ஷாலு ஷம்மு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

எம்ஜிஆர் கெட்டப்பில் பிக்பாஸ் சுரேஷ்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்பதும் ஆரம்பத்தில் சில வாரங்கள் இவர் மிக திறமையாக விளையாடி இளம் போட்டியாளர்களுக்கு சவாலாக இருந்தார்

உலக டெஸ்ட் சாம்பியன் யார்? இறுதிப் போட்டியில் பேட்டிங்கை துவங்கிய இந்தியா!

இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது.

நமது கல்வி உரிமையைப் பாதுகாப்போம்: நீட் தேர்வு குறித்து சூர்யா அறிக்கை!

நமது கல்வி உரிமையைப் பாதுகாப்போம் என்றும், ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அகரம் பவுண்டேசன் சார்பில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா