தமிழக முதல்வர் கலந்து கொண்ட முதல் ஆடியோ ரிலீஸ் விழா

  • IndiaGlitz, [Sunday,May 21 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டதோடு, அந்த படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த படம் 'வைரமகன்', படத்தின் ஹீரோ கோபிகாந்தி.

நடிகர் கோபிகாந்தி ஒரே நேரத்தில் வீரக்கலை, வைரமகன் என இரண்டு படங்களை தயாரித்து அதில் அவரே நாயகனாக நடித்து வருகிறார். இதில் 'வைரமகன்' படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.

தாய்-மகன் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வரும் 'வைரமகன்' படத்தில் கோபிநாத் ஜோடியாக சுகன்யா ஸ்ரீ, சுதா என இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் போண்டாமணி, நெல்லைசிவா, விஜயகணேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.சூர்யா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை முருகவேல் என்பவர் இயக்கி வருகிறார்.

More News

'பாகுபலி' வெற்றியை தொடர்ந்து டிரண்ட் ஆகும் சரித்திர படங்கள்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக கோலிவுட்டில் மீண்டும் சரித்திர படங்களின் டிரெண்ட் ஆரம்பித்துவிட்டதாகவே கருதப்படுகிறது...

சாட்டிலைட் உரிமை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி முடிவு

ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அவர் தயாரிக்கும் படத்தின் சாட்டிலைட் உரிமை வியாபாரம் என்பது மிகவும் முக்கியமானது. படத்தின் பட்ஜெட்டின் ஒரு பெரும் பகுதி சாட்டிலைட் உரிமையில் இருந்தே கிடைத்துவிடும்....

சினிமா என்றால் ரஜினி, கமல், ராஜமெளலி மட்டும் தானா? ஆர்.கே.செல்வமணி ஆவேசம்

மத்திய அரசு சமீபத்தில் திரையுலகிற்கும் ஜி.எஸ்.டி. வரி பொருந்தும் என அறிவித்துள்ளதால் திரையரங்குகளின் டிக்கெட் விலையின் மீது 28% வரிவிதிக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது...

ரஜினி யாருடன் கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஒரிரு வார்த்தைகள் தான் பேசினார். ஆனால் அதுவே தமிழக அரசியலில் ஒரு பெரும் புயலை கிளப்பிவிட்டது. தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் 'ரஜினி ஜூரம்' பிடித்துவிட்டதாக டுவிட்டரில் கூட கிண்டலுடன் பதிவுகள் வருகிறது...

99.99 சதவிகிதம் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். பிரபல காமெடி நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் கூறிய கருத்துக்களை அவ்வப்போது பார்த்து கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட அனைவருமே அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே கூறி வருகின்றனர்...