முதல்வர் அறிக்கையில் 'நீட்'டும் இல்லை, நீதியும் இல்லை: நெட்டிசன்கள் கருத்து

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய அனிதா நேற்று பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார். விலை மதிப்பில்லாத இந்த உயிரின் இழப்பு சுயநல அரசியல்வாதிகளால் ஏற்பட்டது என்பது அப்பட்டமான உண்மை.

நீட் காரணமாக உயிரிழந்த ஒரு மாணவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீட் குறித்து ஒரு வார்த்தை கூட தனது அறிக்கையில் கூறவில்லை. நீட் விலக்கு பெறுவோம், அல்லது நீட் தேர்வு எழுத மாணவர்களை தயார் செய்வோம் என்று எந்த கருத்தும் இல்லாமல் அம்மாவின் அரசு எப்போதும் மாணவர்களுக்கு அக்கரையோடு அவர்களின் வளர்ச்சிக்காக செயல்படும் என்று கூறியுள்ளது நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது.

'நீட்'டும் இல்லாத நீதியும் இல்லாத அறிக்கை என்று அவர்கள் விமர்சித்து வருவதோடு முதல்வரின் அறிக்கைக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.