முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! குவியும் பாராட்டுக்கள்!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

தமிழக முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக அனைத்து கட்சிகளையும் கூட்டி அவர்களுடைய ஆலோசனை பெற்று சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்து வந்தோம்

இந்த நிலையில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு குழு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் அடங்கிய இந்த குழுவில் 13 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதும், அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் இடம்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா முதல் அலையின்போது மிகவும் சிறப்பாக கொரோனா பரவலை கட்டுப்படுத்திய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தற்போது இரண்டாவது அலை தடுப்பு நடவடிக்கை ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வர் இணைத்து உள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்படுத்திய அனுபவம் விஜயபாஸ்கருக்கு இருப்பதால் அவருடைய ஆலோசனை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த ஆலோசனை குழுவில் உள்ள 13 எம்எல்ஏக்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. திமுக - மருத்துவர் நா.எழிலன்

2. அதிமுக - மருத்துவர் சி. விஜய பாஸ்கர்

3. காங்கிரஸ் - ஏ.எம். முனிரத்தினம்

4. பாமக - ஜி.கே. மணி

5. பாஜக - நயினார் நாகேந்திரன்

6. மதிமுக - சதன் திருமலைக்குமார்

7. விசிக - எஸ்.எஸ். பாலாஜி

8. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - வி.பி. நாகை மாலி

9. இந்திய கம்யூனிஸ்ட் - தி. ராமசந்திரன்

10. மனித நேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா

11. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - ரா. ஈஸ்வரன்

12. தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்

13. புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி