ஏஆர் ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர், துணை முதல்வர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இன்று திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆக இருவரும் ஏஆர் ரஹ்மான் உடல் நிலை குறித்து பதிவு செய்தனர். அந்த பதிவுகள் இதோ
முதல்வர் ஸ்டாலின்: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தவுடன், மருத்துவர்களை தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!
துணை முதல்வர் உதயநிதி: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்.
இசைப்புயல் @arrahman அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) March 16, 2025
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்.
— Udhay (@Udhaystalin) March 16, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com