தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 70 வது பிறந்தநாள்; ரஜினி, கமல், இளையராஜா வாழ்த்து..!

  • IndiaGlitz, [Wednesday,March 01 2023]

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசன்: முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு முக ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

ரஜினிகாந்த்: என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அவர் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியாகவும் வாழ்ந்து மக்கள் சேவை செய்வதற்கு அவருடைய 70 வது பிறந்தநாளில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளையராஜா: தன்னுடைய 70 வது பிறந்த நாளை கொண்டாடும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி முக ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும் ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

More News

சுந்தர் சியின் 'அரண்மனை 4' படத்தில் இந்த இரண்டு பிரபல நடிகைகளா?

சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'அரண்மனை 4' என்ற திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

ரஜினியின் தங்கையாக பிரபல நடிகரின் மனைவி நடிக்கின்றாரா?  25 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருக்கும் அடுத்த திரைப்படமான 'லால் சலாம்' திரைப்படத்தில் தெலுங்கு பிரபல நடிகரின் மனைவி நடிக்க இருப்பதாகவும், 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகில்

ஷாலினி அஜித், ஆத்விக் உடன் பாலிவுட் பிரபலத்தின் எதிர்பாராத சந்திப்பு.. க்யூட் வீடியோ..!

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக் ஆகிய இருவரையும் பாலிவுட் பிரபலம் ஒருவர் எதிர்பாராமல் சந்தித்த க்யூட் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

புதிய படப்பிடிப்பில் மணிமேகலை.. இதற்குதான் 'குக் வித் கோமாளி'யில் இருந்து விலகினாரா?

சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்த நிலையில் தற்போது அவர் புதிய படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள

விஷாலின்  'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் மீண்டும் விபத்து.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!

விஷால் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது.