கோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்!

சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கின.

12 வித்தியாசமான வேடங்களின் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இர்பான் பதான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ‘கோப்ரா’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பிரெஞ்ச் இண்டர்போல் அதிகாரி அஸ்லான் எல்மாஸ் என்ற கேரக்டரில் இர்பான் பதான் நடிக்கின்றார் என்ற தகவலையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

More News

நிலவில் ஆய்வு மேற்கொண்ட நாசா… அதிரடி கண்டுபிடிப்பால் மகிழ்ச்சி!!!

பனிக்கட்டி வடிவத்தில் நிலவின் தென்துருவப் பகுதிகளில் நீர் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

ராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு!

பிரபல நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி முடித்துள்ள 'லட்சுமி பாம்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது,

தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா? செல்வராகவனின் திடீர் திட்டம் 

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்த படம் 'காதல் கொண்டேன் 2' என்றும் கூறப்படுகிறது

ரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை

ரசிகர்கள் மற்றும் பொது மக்களின் பயத்தை போக்க நடிகர்கள் இதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுள்ளார் 

நீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு!

சிம்பு நடித்துவரும் 'ஈஸ்வரன்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே