400 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்!!!

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

 

கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் தனது 400 பணியாளர்களை வெளியேற்றும் முடிவினை எடுத்து இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு கிளைகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இதன் கிளைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மேலாளர்கள், உதவி இயக்குநர்கள், இயக்குநர்கறும் அடங்கிய 400 பணியாளர்களை, பணியை விட்டும் அனுப்பும் முடிவை இந்நிறுவனம் எடுத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தற்போது கொரோனா நேரத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் நிறுவனத்தின் நிதி நிலைமையைச் சமாளிக்கவும் இந்த முடிவை எடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் சுமார் 2.90 லட்சம் மக்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தன்னார்வல பிரிவு திட்டத்தின் கீழ் டீம் வொர்க் போன்ற குழு வேலைகளில் ஈடுபடாதவர்கள் தானாக முன்வந்து பதவி விலகும் படியும் நிறுவனம் தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக உயர் பதவிகளில் இருந்த ஊழியர்களின் சம்பளத்தில் 25 விழுக்காடு குறைக்கவும் பட்டது. இதுபோன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளால் தமிழகத்திற்கும் பாதிப்பு ஏற்படுமா என்பதைக் குறித்து தெளிவான விவரங்கள் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

கணவருடன் சேரவிடாமல் தடுத்த மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகள்!

வரதட்சனை கொண்டுவா என கொடுமைப்படுத்தி மருமகளை கொலை செய்யும் காலம் மலையேறிவிட்டது என்றும், தற்போது வரதட்சணை கேட்டால் மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்யும் காலம் வந்துவிட்டது

ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது: ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை!!!

இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது போன்றவை வழங்கி சிறப்பிக்கப்படுவது வழக்கம்.

தனுஷ்-சன்பிக்சர்ஸ் படத்தின் இயக்குனர் யார்? பரபரப்பு தகவல்

தனுஷ் நடித்த 40வது திரைப்படமான 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும்

ஓடிடிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்?

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.

அமெரிக்காவில் நடக்கும் இனவெறிக்கு எதிரான போராட்டம்: ஆதரவு தெரிவித்த ட்ரம்பின் இளைய மகள்!!!

அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் கடந்த மே 25 ஆம் தேதி காவல் துறையினரின் அச்சுறுத்தலால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு நீதி