11 ஆண்டுகளில் இடிந்து விழுந்த கோவை சோமனூர் பேருந்து நிலையம். அதிர்ச்சியில் பொதுமக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவை சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 11 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சரியான பராமரிப்பு இல்லாமல் இடிந்துவிட்டதாகவும், குறிப்பாக மழை பெய்யும்போது பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் தேங்கி நிற்கும் தண்ணீர் கட்டிட்டத்திற்குள் கசிந்ததால் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த பேருந்து நிலையம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது மற்றொரு காரணமாக இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
100 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழங்கால கட்டிடங்கள் உறுதியாக இருக்கும் நிலையில் கட்டி முடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் மட்டுமே ஆன ஒரு கட்டிடம் இடிந்துள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டிடம் கட்டிய காண்ட்ராக்டர், பொதுப்பணி அதிகாரிகள் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout