முதல்முறையாக மாவட்ட ஆட்சி தலைவருக்கு கொரோனா உறுதி: பெரும் பரபரப்பு

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனா அரசால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கு பாமர மக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்பட பிரபலங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டுமின்றி ஏராளமான காவல்துறையினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், ஒரு சில காவல் துறையினர் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

கொரோனா உயிரிழப்பு: இறுதிச்சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் நிதியுதவி!!! கெத்துக் காட்டும் ஒரு மாநிலம்!!!

ஆந்திர மாநிலத்தில் நேற்று கொரோனா பரவல் தடுப்புக்காக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!!! தமிழக அரசின் புது நடவடிக்கை!!!

தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ இட ஒதுக்கீட்டில் இடம் பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது எப்போது? கராத்தே தியாகராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் அரசியலில் குதிப்பது உறுதி என்றும் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும்

பிளாஸ்மா தானம் குறித்து விஜய்சேதுபதி கூறிய முக்கிய தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்

ஓடிடியில் நுழையும் கமலஹாசன்: விரைவில் படப்பிடிப்பு என தகவல் 

தற்போதைய கொரோனா வைரஸ் காலகட்டத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை என்பதால் பிரபல நடிகர் நடிகைகள் கூட ஓடிடி பிளாட்பாரத்தில்