மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே  ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு ஆகியோர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு எம்,.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் என்பவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றின் அறிகுறி இருந்ததாகவும், அதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

More News

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி: பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை

சாத்தான்குளம் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய  இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள்

சீரியல் நடிகை நவ்யா சுவாமியுடன் நடித்த நடிகருக்கும் கொரோனா! பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய பாதிப்பு உள்ளது

60 வயது பிரபல நடிகருக்கு ஜோடியாகும் அமலாபால்?

ரஜினி கமல் போன்ற 60 வயதுக்கும் மேற்பட்ட மாஸ் நடிகர்களுக்கு இளம் நடிகைகள் ஜோடியாக நடிப்பது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் மற்றொரு 60 வயதான பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க

கோபிநாத்துக்கு அவரது மகள் அளித்த பிறந்த நாள் பரிசு!

விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அது புரளி என்றும், மனநிலை சரியில்லாத ஒருவர் செய்த செயல்