சேட்டை செய்த மாணவரின் பிறப்புறுப்பை துன்புறுத்திய ஆசிரியர்கள்: கோவையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

கோவையைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அதிக சேட்டை செய்ததன் காரணமாக ஆசிரியர்கள் சூழ்ந்து அந்த மாணவரின் பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும் பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்து பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் கவனம் செலுத்திதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் பலமுறை கண்டித்தும் மாணவர் அடங்கவில்லை

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் முதல்வர் ஆகியோர் கூடி மற்ற மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியேற்றி விட்டு கதவை இழுத்து மூடிவிட்டு அந்த மாணவரை பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்து விட்டுக் துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் வலியால் துடித்த அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்க மாணவரின் பெற்றோர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது

More News

மீண்டும் நடிகர் சங்க தேர்தலா? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இந்த தேர்தலில்

அஜித்தின் 'வலிமை'யில் நாயகியாகும் விஜய் பட நடிகை?

தல அஜித் நடிக்கவிருக்கும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

கமல் படத்தில் நடிக்க மறுத்தாரா ராகவா லாரன்ஸ்?

சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், கமலஹாசன்

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது, கொழுப்பும் குறையும் - கணேஷ் சிங் MP (பாஜக).

சமஸ்கிருதம் பேசினால் நரம்பு மண்டலம் சீராகும், உடலில் சக்கரை அளவும், கொழுப்பும் அளவும் குறைந்து வரும் என பா.ஜ.க எம்.பி. கணேஷ் சிங் மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்

உதயநிதி ஸ்டாலின் கைது..!

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்