சீன எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி: முதல்வர் அசத்தல்

சமீபத்தில் இந்திய எல்லையில் சீன ராணுவ வீரர்கள் திடீரென அத்துமீறி ஊடுருவி வந்ததால் அவர்களை தடுக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்து வருகிறது என்பதும் அவர்களுடைய குடும்பத்திற்கு அரசு பணி வழங்கவும் ஏற்பாடு செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீன ராணுவ மோதலில் உயிரிழந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு என்பவரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி கொடுத்து இருப்பது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

ஏற்கனவே கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்திற்கு ரூபாய் 5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர்களது குடும்பத்திற்கு ஒரு வீட்டு மனை வழங்கப்படும் என்றும், அவரது மனைவிக்கு பணி வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார். இதன்படி தற்போது முதல் கட்டமாக துணை கலெக்டராக சந்தோஷ் பாபுவின் மனைவியை நியமித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்

தெலுங்கானா முதல்வரின் இந்த உத்தரவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒரு பதவி வழங்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்