'மாநாடு' படத்திற்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அழைத்து சென்ற கலெக்டர்!

  • IndiaGlitz, [Monday,December 06 2021]

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்திற்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி அழைத்துச் சென்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பாக நேற்று பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் இணைந்து ’மாநாடு’ படத்தை பார்த்து மகிழ்ந்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கேப்டன் பதவியேற்ற பாவனிக்கு இதுதான் தண்டனை: அக்சரா தந்த அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களை, கேப்டன் பதவியை ஏற்கவிடாமல், தனது நாணயத்தின் சக்தி மூலம் கேப்டன் ஆகி வரும் நிகழ்வுகள்

சூர்யாவின் அடுத்த படத்தில் வேற லெவல் பாடலை பாடிய அனிருத்!

சூர்யாவின் அடுத்த படத்தில் வேற லெவல் பாடலொன்றை இசையமைப்பாளர் அனிருத் பாடி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

ரம்யா பாண்டியனின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'வலிமை' அம்மா பாடலுக்கு பொருத்தமான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'வலிமை' திரைப்படத்தின் அம்மா பாடல் நேற்று வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது

ஷிவானி நாராயணன் வீட்டுக்கு வந்த புதிய உறுப்பினர்: வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய வீட்டிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்திருப்பதாக புகைப்படங்களை வெளியிட்ட நிலையில்