ரயில் பாலத்தில் செல்பி எடுத்த இரண்டு மாணவிகள் பரிதாப பலி!

ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து விலைமதிப்பில்லா உயிரை இழக்கும் பலர் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு மாணவிகள் ரயில் பாலத்தில் நின்று செல்பி எடுக்கும்போது பரிதாபமாக ஒருவர் பலியாகியும் இன்னொருவர் படுகாயம் அடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஒரு ரயில் பாலத்தில் நின்றபடி இரண்டு மாணவிகள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த பாலத்தில் திடீரென ஒரு ரயில் மிக வேகமாக வந்துள்ளது. அந்த ரயில் ஒரு மாணவி மீது மோதியதால் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இன்னொருவர் பாலத்திலிருந்து ஆற்றில் கீழே விழுந்தார். ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பாலத்தில் அபாயகரமான இடத்தில் நின்றுகொண்டு செல்பி எடுப்பதால் விலைமதிப்பில்லா ஒரு மாணவியின் உயிர் போனது மட்டுமன்றி இன்னொரு மாணவியின் உயிர் ஊசலாடிக் கொண்டு இருப்பதால் சுற்றுலா வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

நீர்வீழ்ச்சி அருகே பாறையில் உட்கார்ந்து செல்பி: இரு இளைஞர்கள் பரிதாப பலி

செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பலர் தங்கள் உயிரை இழந்து வருவதும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஊட்டியில் நீர்வீழ்ச்சி

முத்தத்தில் எத்தனை வகை: இயக்குனருக்கு சொல்லி கொடுத்த நடிகை

இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படங்களில் ஒன்று 'உற்றான்'. ரோஷன், ஹரிரோஷினி நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது

'பிக்பாஸ் 3' டைட்டில் வின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டவர் மலேசியாவை சேர்ந்த முகின் ராவ். இவர் கடைசி சில வாரங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டதும்

நயன்தாராவுக்காக மோதிக்கொண்ட இரண்டு இயக்குனர்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 2005ஆம் ஆண்டு ஐயா என்ற தமிழ் படத்தில் அறிமுகமானாலும் அதற்கு முன்னரே அவர் மூன்று மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மாஸ்டர்' டிராக்லிஸ்ட் இணையத்தில் லீக்? அதிர்ச்சியில் படக்குழு!

தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஒரு திரைப்படம் இண்டர்நெட்டில் லீக் செய்யப்படாமல் உருவாக்குவது, ரிலீஸ் செய்வது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.