close
Choose your channels

பொதுவெளியில் சாக விரும்பிய நபர்… மனதை உருக்கும் சம்பவம்!

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொலம்பியா நாட்டில் கருணைகொலை செய்துகொள்ள விரும்பிய நபர் ஒருவர் பொதுவெளியில் மக்களுக்கு முன்பாகச் சாக விரும்பியிருக்கிறார். இந்தச் சம்பவம் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது.

தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் அல்லது வருடக்கணக்கில் வலியால் துடித்துவருவோர் எனப் பலரும் சட்டப்பூர்வமாகத் தற்கொலை செய்து கொள்ள விரும்புகின்றனர். இந்த வகையான கருணைக் கொலையை ஒருசில நாடுகள் மட்டுமே அனுமதித்து இருக்கின்றன. இந்தியாவில் கருணைக்கொலை இன்றைக்கு வரைக்கும் சட்டப்பூர்வமாக மாற்றப்படவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து கருணைக்கொலை செய்துகொள்ளலாம்.

இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு 60 வயதான விக்டர் எஸ்கோடார் என்பவர் கடந்த 2 வருடங்களாக தீராத வலியை அனுபவித்து வருகிறார். அவர் கடந்த அக்டோபரில் இம்பனாகோ எனும் மருத்துவமனை மூலமாக கருணைக்கொலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் மருத்துவர்கள் இன்னும் அவருடைய வலியை குணப்படுத்த வழிமுறைகள் இருப்பதாகக் கூறி அவருடைய கோரிக்கையை நிராகரித்தனர். இதனால் மனமுடைந்த எஸ்கோடர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தற்போது வெற்றிப்பெற்றுள்ளார்.

இதையடுத்து நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் பல ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மாஸ்கோடர் பொதுவெளியில் வைத்து சாக விரும்பியிருக்கிறார். அவருடைய ஆசையை நிறைவேற்ற மருத்துவர்கள் நேரலை ஒளிப்பரப்போடு எல்கோடருக்கு மயக்கஊசி போட்டு கருணைகொலை செய்துள்ளனர். மேலும் இதைத்தான் விரும்புகிறேன் என்று எல்கோடர் சொன்ன வாக்கியம் தற்போது கொலம்பியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் கருணைக்கொலை தடைசெய்யப்பட்டது. இந்தச் சட்டம் ஜுலை 2021 முதல் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சட்டப்பூர்வமான விஷயங்கள் குறித்து மிகவும் கவலைப்படும் மருத்துவர்கள் அதிகாரிகள் கருணைக்கொலையை விரைந்து அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவே எல்கோடர் இப்படி பொதுவெளியில் கருணைகொலை செய்துகொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.