ஹீரோவாகும் ஜெயம் ரவியின் சூப்பர்ஹிட் பட இயக்குனர்!

  • IndiaGlitz, [Monday,October 04 2021]

நடிகர் ஜெயம் ரவி தயாரித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இயக்குனர் தற்போது ஹீரோவாகி உள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கோமாளி’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்குவது மட்டுமன்றி அவரே ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஏஜஸ் நிறுவனத்தின் 22வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் நாயகி உட்பட இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் ஏற்கனவே பல இயக்குனர்கள் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

லைகர் விலங்கிடம் மண்ணைக் கவ்விய யுவராஜ் சிங்… வைரல் வீடியோ!

பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பெயர்போன இந்தியக் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்

ரைஸ் குக்கரை திருமணம் செய்த நபர்… 4 நாட்களில் விவாகரத்துக்குக் கூறிய பலே காரணம்!

தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வது, செக்ஸ் பொம்மையைத் திருமணம் செய்து கொள்வது,

பிக்பாஸ் சீசன் 5: முதல் வார கேப்டன் யார்? ஐந்து பேர் போட்டி

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று தொடங்கி உள்ள நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்கள் யார் யார் என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் தினந்தோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களும் அவர்களின் முழு விபரங்களும்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒவ்வொரு போட்டியாளரையும் அறிமுகம் செய்து

படுக்கையறையில் சாகசம் செய்த நடிகை அஞ்சலி: வைரல் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை அஞ்சலி படுக்கையறையில் சாகசம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.