close
Choose your channels

பிரபல இயக்குனரின் உதவியாளரை மணந்த 'கோமாளி' படத்தொகுப்பாளர்

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’கோமாளி’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் பல திரைப்படங்கள் கடந்த நான்கு வாரங்களாக வெளிவந்த போதிலும் ’கோமாளி’ திரைப்படம் இன்னும் பல தியேட்டர்களில் வெற்றி நடை போட்டு வருகிறது என்பதே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது

இந்த நிலையில் ’கோமாளி’ படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவன் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. பிரபல இயக்குனர் பாண்டிராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த காயத்ரி கண்ணன் என்பவர் தான் மணப்பெண். பிரதீப் ராகவன் - காயத்ரி கண்ணன் திருமணம் இன்று மிகச்சிறபாக நடைபெற்றது

இந்த திருமணத்தில் இரு தரப்பு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.