close
Choose your channels

ஜெயம் ரவியின் 'கோமாளி' சென்சார் தகவல்

Tuesday, August 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'கோமாளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 143 நிமிடங்கள் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது

முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படம் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெறும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதேபோல் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழை அளித்துள்ளனர். இந்த சான்றிதழ் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு படக்குழுவினர் தங்கள் சேட்டையை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.