close
Choose your channels

போராடுவோம் போராடுவோம்: ஸ்ருஷ்டிக்கு எதிராக ஒன்று சேர்ந்த கோமாளிகளால் பரபரப்பு..!

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளி புகழை திட்டிவிட்டதால் அனைத்து கோமாளிகளும் ஒன்றிணைந்து ’போராடுவோம் போராடுவோம்’ என போராட்டம் செய்து வெளிநாட்டுப்பு செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தற்போது நான்காவது சீசன் சூடு பிடித்துள்ளது என்பது தெரிந்ததே. இதுவரை கிஷோர், காளையன் ஆகிய குக்குகள் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 8 குக்குகள் உள்ளனர்.

இந்த நிலையில் வரும் சனி ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் குக் ஸ்ருஷ்டிக்கு புகழ் கோமாளியாக உள்ளார். அதில் புரோட்டா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் புகழை ஸ்ருஷ்டி திட்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து கோமாளியை திட்டிய ஸ்ருஷ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்வோம் என புகழ அறிவிக்க உடனடியாக குரேஷி, சுனிதா உள்பட அனைத்து கோமாளிகளும் ’போராடுவோம் போராடுவோம்’ என ஸ்ருஷ்டிக்கு எதிராக குரல் கொடுத்து வெளிநடப்பு செய்யப் போவதாக தெரிவித்த காட்சிகள் புரமோவில் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.