எனது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனையை தீர்த்தவர் தனுஷ்: பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

எனது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சினையை தீர்த்து வைத்தவர் தனுஷ்தான் என்றும் அவரால் தான் நான் இன்று சந்தோசமாக இருக்கிறேன் என்றும் பிரபல காமெடி நடிகர் ஒருவர் கூறியுள்ளார்

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். இவர் தனுஷின் ’மாரி’ படத்தில் மூலம் பிரபலமானார் என்பதும் அதன்பின்னர் அவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரோபோ சங்கரும் அதில் பேசியதாவது:

தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தனுஷ்தான். கரோனா காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு போன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்குக் குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

நான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்கான ஆரம்பப் புள்ளியைப் பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்.

இவ்வாறு ரோபோ ஷங்கர் கூறினார்.

More News

த்ரிஷ்யம் படத்தைப் புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட்டர் அஸ்வின்… என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட்டின் முன்னணி வீரராக இருந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் விஜய் உறவினர்!

அஜித் நடித்த 'பில்லா' 'ஆரம்பம்' உள்பட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் தளபதி விஜய்யின் உறவினர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது 

விராட் கோலி அடுத்தவர் கூறுவதை காது கொடுத்து கேட்பாரா? மனம் திறக்கும் சரந்தீப் சிங்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி வகித்து வரும் விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான மனிதர்.

வீட்டில் விளக்கேற்றி தீபம்- அதிமுகவினருக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோள்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த பிரபல நடிகர்!

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் காரணமாக மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த எலக்ட்ரீஷியன்