close
Choose your channels

அஜித், விஜய்யுடன் நடித்த காமெடி நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் விஜய் உள்பட பல முக்கிய நடிகர்களுடன் நடித்த பிரபல காமெடி நடிகர் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் சிவ நாராயணமூர்த்தி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனர் விசு அவர்களால் அறிமுகமான சிவ நாராயணமூர்த்தி சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்பட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் உடல் நடித்துள்ளார் என்பதும் இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வடிவேலு, விவேக் காமெடி காட்சிகளில் நடித்து இவர் பிரபலம் ஆனார் என்பதும் அவரது காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 67. சிவநாராயண மூர்த்தி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.