எந்த லெவலுக்குப் போவேன் என்று மிரட்டுகிறார்! பாலாஜியின் மனைவி புகார்

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

நகைச்சுவை நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த மே மாதம் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தன்னை ஜாதியின் பெயர் சொல்லி பாலாஜி திட்டியதாக அவரது மனைவி நித்யா புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகாரின் அடிப்படையில் மாதவரம் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று அவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த நித்யா கூறியதாவது:
பாலாஜி என்னைத் தாக்கியது, சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியது தொடர்பாக அவர்மீது நான் ஏற்கெனவே மாதவரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருந்தேன். அந்தப் புகாரை மையமாக வைத்து வழக்கு பதிவுசெய்யாமல் மாதவரம் போலீஸார் இழுத்தடிக்கிறார்கள். பாலாஜி என்னை அடித்ததற்கான ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ஸ், ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், எஃப்.ஐ.ஆர் போட மறுக்கிறார்கள்.
மாதவரம் போலீஸாரை, பாலாஜி தனக்கு சாதகமாகவே செயல்படவைக்கிறார். என் வழக்கறிஞர்களைக்கூட அவர் பக்கம் இழுத்துக்கொண்டார். இதனால் இதுவரை இரண்டு வழக்கறிஞர்களை மாற்றிவிட்டேன். ஹாஸ்பிடலில் உள்ள ஆவணங்களைக்கூட தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி மாற்றியிருக்கிறார். மேலும், குண்டர்களையும் அரசியல்வாதிகளையும் வைத்து என்னை மிரட்டுகிறார். இப்படி ஆரம்பம் முதல் இன்று வரை அனைத்து தரப்பினரையும் அவருக்குச் சாதகமாகவே செயல்படவைக்கிறார்.
அவ்வளவு ஏன், என் காரை எடுத்துச் சென்றுவிட்டார். என் பாஸ்போர்ட், நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்றுவிட்டார். தவிர, என் கேரக்டரைப் பற்றி வெளியே தவறாகச் சித்திரிக்கிறார். இப்படி என்னை விவாகரத்துக்குப் போகவிடாமல் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பிரச்னை கொடுத்துகொண்டே இருக்கிறார்.
இப்பவும் சொல்கிறேன், அவரைப் பழிவாங்க வேண்டும்; அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், ஒரு பிரபலமாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? எவ்வளவு பெரிய தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வீர்களா? 'நான் ஏற்கெனவே விவாகரத்து ஆனவன். நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன். இந்தப் பிரச்னையை எப்படி டீல் பண்றதுனு எனக்குத் தெரியும். நீ என்ன மூவ் பண்றியோ பண்ணு. நான் உன்கூட இருக்கிறதுக்கு எந்த லெவலுக்குப் போவேன்' என்கிறார். நாங்கள் பிரிந்து கிட்டத்தட்ட 50 நாள்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
அவர் தன் சோஷியல் இமேஜைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே எங்களுடன் சேர்ந்திருக்க நினைக்கிறார். இந்த எட்டு வருஷங்களில் எங்களுக்குள் எந்த அன்யோன்யமும் இல்லை. என்னையும் என் குழந்தையையும் வைத்து செயற்கையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். குடும்ப உறவில் கொஞ்சமாவது நேர்மை இருக்க வேண்டாமா? பணக்கார, போலியான வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நிம்மதியான வாழ்க்கைதான் தேவை. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். அதை நோக்கியே நான் செயல்படுகிறேன்.
ஆனால், மாதவரம் போலீஸாரோ, உங்க மேலயும் வழக்கு போடுவோம்' என்கிறார்கள். சாதாரண ஒரு குடும்பப் பெண்ணை, பாலாஜி தன் நடவடிக்கையால் வீதிக்கு இழுத்துவந்துவிட்டார். நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றால், அவர்கள் பாலாஜியுடன் சேர்ந்துகொண்டு பாதிக்கப்பட்ட எனக்கு எதிராகவே பேசுகிறார்கள். அதனால்தான் நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தேன். அவர்கள் மாதவரம் போலீஸாருக்கு போன் செய்து மாலை 4.30 மணிக்குள் எஃப்.ஐ.ஆர் போடச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகும் அவர்கள் எஃப்.ஐ.ஆர் போடவில்லை என்றால், என் புகாரை பத்திரிகைகளுக்கு அளித்துவிட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய்யலாம் என இருக்கிறேன்''
இவ்வாறு நித்யா கூறினார்.

More News

ஜிஎஸ்டி விவகாரத்தில் ரஜினியின் மெளனம் ஏன்? டி.ராஜேந்தர்

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகள் இந்த புதிய வரிவிதிப்பால் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் கேளிக்கை வரி ஜிஎஸ்டியில் அடங்குமா? தெளிவுபடுத்த விஷால் கோரிக்கை

இன்று முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைக்கு வந்த போதிலும் திரைத்துறையை பொறுத்தவரை மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரண்டு வரிகள் செலுத்த வேண்டிய நிலை உள்ளது...

சென்னையில் 'தல' தரிசனம். ரசிகர்கள் மகிழ்ச்சி

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வந்த 'விவேகம்' படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பிற்காக அஜித், விவேக் ஓபராய் உள்பட படக்குழுவினர் மீண்டும் கடந்த வாரம் செர்பியா சென்றதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

ஜிஎஸ்டி: மோடிக்கு எதிராக ரஜினியை திருப்ப எடப்பாடியின் வியூகமா?

பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு எதிராக ரஜினி, விஜய் போன்றவர்களை திருப்ப, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆடும் சதுரங்க விளையாட்டு தான் ஜிஎஸ்டி என்று கிருஷ்ணவேணி பஞ்சாலை, பறந்து செல்ல வா போன்ற படங்களை இயக்கிய தனபால் பத்மநாபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

'அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறேன்' என்று கூறுபவர்களை உதைப்பேன். மன்சூர் அலிகான்

நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரி பல துறைகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.