இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா பாண்டியன் காலமானார்!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சிறந்த பேச்சாளரும் சிந்தனையாளருமான தா பாண்டியன் அவர்கள் சற்று முன்னர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 88

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா பாண்டியன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று முதல் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதனை அடுத்து அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகிறார்கள்

மூத்த அரசியல்வாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தா பாண்டியன் அவர்களின் மறைவு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிறந்த அரசியல்வாதி, நேர்மையானவர், எளிமையானவர், சிறந்த எழுத்தாளர், தலைசிறந்த பேச்சாளருமான தா பாண்டியன் அவர்கள் மறைவை அடுத்து அவரது குடும்பத்திற்கு தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

More News

ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டது 'சூரரை போற்று': சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில், சுதாகொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது

'பிக்பாஸ்' பிரபலம் நடித்த படத்தின் பாடலை வெளியிட்ட தனுஷ்!

'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல நட்சத்திரங்களுக்கு திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்பது தெரிந்ததே

கடற்கரையில் காற்று வாங்கும் மாஸ்டர் பட நடிகை… வைரல் புகைப்படம்!

தமிழில் “பேட்ட“ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் தளபதி விஜய் நடித்த “மாஸ்டர்“ படத்தில் மூலம் முன்னணி நடிகை என்ற உயரத்தை எட்டிவிட்டார்.

இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்: வைரமுத்து

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் திரைப்படங்கள் பிராந்திய மொழி திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்ட நிலையில் தற்போது பல தமிழ் திரைப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை: கிரிக்கெட் வீரரும் இணைந்தார்!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இருக்கும் நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நடிகர்-நடிகைகள் முக்கிய அரசியல் கட்சிகளில் இணைந்து வருவதை