ஸ்கூட்டரை போனஸாக வழங்கிய நிறுவனம்… ஆடிப்போன ஊழியர்கள்!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

சூரத்தில் செயல்பட்டுவரும் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தீபாவளி போனஸாக கொடுத்து அசத்தியிருக்கிறது. இதைப் பார்த்த ஊழியர்கள் கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்புடன் சேர்த்த போனஸ்ஸும் பிரதான இடம் பிடிக்கிறது. காரணம் போனஸ் தொகை இருந்தால்தான் சிலரது வீடுகளில் தீபாவளியே கொண்டாட முடியும். அப்படியிருக்கும்போது ஒரு நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையே தீபாவளி போனஸாக வழங்கியிருக்கிறது.

அலையன்ஸ் குரூப் எனப்படும் அந்த நிறுவனம் எம்ராய்டரி செய்யும் மெஷின்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் Okinawa Praisepro நிறுவனம் தயாரித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தனது 35 ஊழியர்களுக்கு போனஸாக கொடுத்து அசத்தியிருக்கிறது. இதன் விலை ரூ.76,848 என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விற்கும் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அதுவும் பரிசாக கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்தத் தகவல் வெளியானதையடுத்து, இந்த போனஸ் நமக்கும் கிடைத்திருக்கக் கூடாதா? எனப் பலரும் ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

கொரோனா வார்டில் தீ விபத்து… 10 பேர் உடல்கருகி உயிரிழந்த அவலம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது

கொரோனாவை தடுக்கும் மாத்திரைகள்… விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

கொரோனா சிகிச்சைக்கு உரிய மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில்

இந்த வாரம் எலிமினேஷன் ஆனவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர் குறித்த தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் புதுவீட்டில் கணவருடன் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் புதிதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாங்கிய வீட்டில் கணவருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கமல் பிறந்த நாளில் ஆக்சன் விருந்து: 'விக்ரம்' டீசர்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவர் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் டீசர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.