close
Choose your channels

ஓவியாவை வெல்வாரா பிந்துமாதவி?

Monday, July 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று புதிய பங்கேற்பாளராக நடிகை பிந்துமாதவி களமிறங்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர் கமல்ஹாசனிடம் பேசியபோது, தனக்கு ஓவியா மட்டுமே கடும் போட்டி கொடுப்பவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற பங்கேற்பாளர்களுக்கும் பிந்துமாதவிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஓவியாவுக்கு எந்த அளவு வெளியே செல்வாக்கு இருக்கின்றது என்பது உள்ளே உள்ளவர்களுக்கு தெரியாது. ஏன் ஓவியாவுக்கே தெரியாது. ஆனால் புதிய பங்கேற்பாளரான பிந்துவுக்கு இது அனைத்தும் தெரியும். எனவே அவர் மற்றவர்களை ஒரு போட்டியாகவே கருதாமல், ஓவியாவை மட்டுமே தோற்கடிக்க வேண்டும் என்று செயல்பட வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.

ஆனாலும் ஓவியாவை நேயர்கள் தங்களில் ஒருவராக பார்க்க தொடங்கி வெகுநாட்கள் ஆகிவிட்டது. நாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ அதே மாதிரி ஓவியா இருப்பதால் நம்மால் முடியாதை ஓவியா செய்கிறார் என்பதால்தான் அவருக்கு இந்த அளவுக்கு புகழும் மரியாதையும் கிடைத்துள்ளது. எனவே ஓவியாவை தோற்கடிப்பது என்பது பிந்துமாதவிக்கு ஒரு சவாலான காரியம். இருப்பினும் அவர் என்ன வியூகத்துடன் வந்துள்ளார் என்பதை போக போக தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.