காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! சிவகங்கை மட்டும் சஸ்பென்ஸ் ஏன்?

அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்திற்கும் கிளம்பிவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்பட பத்து தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில்தான் வேட்பாளர் பட்டியலையே அறிவித்துள்ளது. அதிலும் புதுச்சேரி உள்பட 9 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார் என்பதால் அவருக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் சஸ்பென்ஸில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது

காங்கிரஸ் கட்சியின் 9 தொகுதிகள் வேட்பாளர் பட்டியல் இதோ:

1. திருவள்ளுர் - திரு கே. ஜெயக்குமார்

2. கிருஷ்ணகிரி - டாக்டர் ஏ. செல்லக்குமார்

3. ஆரணி - டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்

4. கரூர் - செல்வி எஸ். ஜோதிமணி

5. திருச்சிராப்பள்ளி - திரு சு. திருநாவுக்கரசர்

6. தேனி - திரு. ஈ.வி.கே.ஸ் இளங்கோவன்

7. விருதுநகர் - திரு மாணிக்கம் தாகூர்

8. கன்னியாகுமரி - திரு வசந்தகுமார்

9. புதுச்சேரி -திரு. வைத்தியலிங்கம்

More News

சூர்யாவின் 'என்.ஜி.கே' முக்கிய அப்டேட்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த ஆண்டே வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி கொண்டே வருகிறது.

ஜெயலலிதா கேரக்டருக்கு தேசிய விருது பெற்ற நடிகை!

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்திற்கு 'தலைவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த டான்ஸ் மாஸ்டர் கலா!

கடந்த சில நாட்களாக கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் அரசியல் கட்சியில் இணைந்து வருவதை பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம்.

தொடர்ந்து 45 நாட்கள் பப்ஜி விளையாடிய மாணவர் பரிதாப பலி!

பப்ஜி என்ற ஆன்லைன் கம்ப்யூட்டர் விளையாட்டு,  மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமைப்படுத்துவதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை

ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது! சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்குமாறு சரவணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு