ரஜினியை திடீரென சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்

  • IndiaGlitz, [Friday,June 01 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே ஒரு நாள் தூத்துகுடி சென்று வந்து அதன் பின்னர் கொடுத்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ரஜினி குறித்து செய்தி வெளியிடாத ஊடகமே இல்லை என்று கூறும் அளவிற்கு அவர் டிரெண்டில் உள்ளார்.

இந்த நிலையில் ரஜினி மீது பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் நெட்டிசன்கள் வைக்கும் குற்றச்சாட்டு, அவர் பாஜக ஆதரவாளர் என்பதுதான். இந்த நிலையில் இன்று திடீரென பாஜகவுக்கு எதிரான கட்சியான காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கராத்தே தியாகராஜன் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில் கராத்தே தியாகராஜனுடன் ரஜினிகாந்த் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது புதிய கூட்டணிக்கு அச்சாரமா? என்பது போகப்போகத்தான் தெரியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

வீட்டு வேலை செய்யும் நடிகை

கடந்த சில நாட்களாக பிட்னெஸ் சேலஞ்ச் திரையுலகினர் மத்தியில் புகழ் பெற்று வருகிறது.

ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய பிரபல நடிகர்?

சமீபத்தில் நடந்து முடிந்த 11வது ஐபிஎல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பது தெரிந்ததே

ஜூலியின் திடீர் அம்மன் அவதாரம் ஏன் தெரியுமா?

ஜல்லிக்கட்டு மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த ஜூலி, ஏற்கனவே அனிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

கர்நாடகாவில் 'காலா' வெளியாகுமா? முதல்வர் குமாரசாமி பதில்

 ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை கர்நாடகத்தில் திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தசபை தடை விதித்துள்ளது.

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.