முன்னாள் எம்.பி காலமானார்...! அரசியில் கட்சியினர் இரங்கல்...!

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்.பி இன்று வயது மூப்பினால் காலமானார்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார், இவருக்கு வயது 93. இவர் 1991 முதல் 1996 வரை தஞ்சை மக்களவை தொகுதியில் எம்.பி யாக இருந்தவர். வயது மூப்பின் காரணமாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இன்று உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான பூண்டிக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது. துளசி அய்யாவின் இறப்பிறகு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அமமுக கட்சித்தலைவர் தினகரன் டுவிட்டரில் துளசி அய்யாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,

முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்தியப் பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் கே. துளசி அய்யா வாண்டையார் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

பழம்பெருமையும் பாரம்பரிய சிறப்பும் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தாலும் ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்வதில் எப்போதும் பெருமிதம்கொண்டவர். ‘ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய துளசி அய்யா.... அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியதோடு அரசியல், விவசாயம், கல்வி, சமூகம், இலக்கியம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

அன்னாரது மறைவால் வாடும் டி. கிருஷ்ணசாமி வாண்டையாருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More News

பயன்பாட்டுக்கு வந்த 2DG கொரோனா சிகிச்சை தூள் மருந்து? எங்கு கிடைக்கும்?

கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் தூள் வடிவிலான 2DG எனப்படும் ஒரு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! குவியும் பாராட்டுக்கள்!

தமிழக முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக அனைத்து கட்சிகளையும் கூட்டி

ரெம்டெசிவிர் வாங்க நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம்: காவல்துறை அறிவிப்பு

கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நேரு ஸ்டேடியத்தில்

ஒரே மணமேடையில் அக்கா-தங்கைக்கு தாலி கட்டிய வாலிபர்! மணமகள்கள் வீட்டார் மகிழ்ச்சி!

வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் அக்கா தங்கை ஆகிய இருவருக்கும் தாலிகட்டி மனைவிகளாக ஏற்றுக்கொண்டதை அடுத்து அந்த மணமகள்களின் வீட்டார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு திரையுலக பிரபலம்: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில நாட்களாக திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் உயிரிழந்து வருகின்றனர் என்பதையும் பலர் அதிலிருந்து குணமாகி வருகின்றனர்