பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: விஜய்க்கு தேசிய கட்சி ஆதரவு

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய சில கருத்துக்கள் ஆளுங்கட்சியை அதிருப்தி அடைய செய்த நிலையில் விஜய்க்கு கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி பிகில் இசை விழாவிற்கு இடம் கொடுத்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை அரசியலாகிவிட்டது. பிகில் திரைப்பட நிகழ்ச்சி நடந்ததற்காக தனியார் பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை உயர்கல்வித்துறை திரும்பப்பெற தேசிய கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பிகில் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியது அதிகார துஷ்பிரயோகம் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியபோது, 'கல்லூரி வளாகத்தின் வெளியே உள்ள அரங்கில்தான் விழா நடந்துள்ளது என்றும், இது மிகவும் தவறான முன்னுதாரணம் என்றும், ஒரு அமைப்பை நோட்டீஸ் அனுப்பி பயமுறுத்துவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் கூறினார். மேலும் சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக பயமுறுத்துவது போல்  பள்ளி, கல்லூரி நிர்வாகத்தை தமிழக அரசு பயமுறுத்துகின்றனர். ஒரு கல்லூரியில் திரைப்படத்துறையை சேர்ந்த ஒருவர் உரையாற்றுவதில் என்ன தவறு உள்ளது? பெரியார், அண்ணா முதல் பல தலைவர்கள் கல்லூரிகளில் உரையாற்றியுள்ளனர். கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் ஒரு கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்புவது அவர்களை மிரட்டுவது ஆகும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

More News

பிக்பாஸ் வீட்டை விட்டு இன்றே வெளியேறுகிறாரா கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போதுள்ள ஐவரில் மூவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். அதில் இந்த வாரம் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுவிட்டால்

ரஜினியை அடுத்து எம்ஜிஆர் டைட்டிலை தேர்வு செய்த பொன்ராம்!

ஸ்க்ரீன்‌ மீடியா எண்டர்டெயின்மெண்ட்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ தயாரிப்பில்‌ பொன்‌.ராம்‌ - சசிகுமார்‌ கூட்டணியில் இன்று தொடங்கியுள்ள திரைப்படத்திற்கு  'எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌'

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு விவேக் அளித்த விளக்கம்!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதில் இருந்து அந்தத் திரைப்படத்திற்கு நாலாபுறமும் இருந்து பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.

நிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

கோவாவில் நிர்வாண பார்ட்டி நடக்கவிருப்பதாகவும், இந்த பார்ட்டியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் போஸ்டர் ஒன்று