'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் குக்’கள் மற்றும் கோமாளிகள் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சியின் ‘குக்’களாக அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா, மதுரைமுத்து, கனி, தர்ஷா, தீபா ஆகியோர்களும் கோமாளிகளாக ஷிவாங்கி, புகழ், சரத், சக்தி, மணிமேகலை, சுனிதா, பாலா உள்ளிட்ட சிலரும் பங்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்’களில் ஒருவராகிய பாபா பாஸ்கர் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இருக்காது. குறிப்பாக ’மாரி’ திரைப்படத்தின் மியூசிக் போட்டவுடன் கையில் யார் கிடைத்தாலும் அவர்களை தூக்கி கொண்டு செல்லும் அவருடைய அட்ராசிட்டியால் நிகழ்ச்சியே களைகட்டி உள்ளது

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது. திருப்பதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் பாபா பாஸ்கர், அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். பாபா பாஸ்கருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

More News

களைகட்டிய பிக்பாஸ் சோம்சேகர் பிறந்த நாள் விழா: வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற சீசன்களை விட பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வித்தியாசமானவர்களாக உள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் கருத்துவேறுபாடுகளுடன் இருந்தாலும்,

ஒரு தடவை பயம் போயிட்டா, திரும்ப வரவே வராது: 'ப்ரெண்ட்ஷிப்' டீசர்

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவான 'ப்ரெண்ட்ஷிப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? ஆச்சரிய புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த், 'ரோஜா கூட்டம்' என்ற திரைப்படத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் அதன்பின் 'ஏப்ரல் மாதத்தில்' 'பார்த்திபன் கனவு' 'வர்ணஜாலம்

புடவை அணிந்த தசாவதாரம் பட அழகி… வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “தசாவதாரம்”. இதில் கமல்ஹாசனின் 10 கேரக்டர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ஒருத்தன் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே இருக்குறது: 'நெஞ்சம் மறப்பதில்லை' ஸ்னீக்பீக் வீடியோ

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்தது.