close
Choose your channels

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்: டீசரில் யாராவது கவனிச்சிங்களா?

Tuesday, February 23, 2021 • தமிழ் Comments

சமீபத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ படத்தின் டீசர் வெளியான நிலையில் இந்த டீசரில் குக் வித் கோமாளி பிரபலம் ஒரே ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ளதை இரசிகர்கள் கவனித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் குக் மட்டும் கோமாளிகளின் காமெடிகள் வேற லெவலிலும் வித்தியாசமாகவும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இறுதிவரை அலப்பரை செய்து வருபவர்களில் ஒருவர் பாபா பாஸ்கர். நடன இயக்குனரான இவர் பெரும்பாலும் தனுஷ் படங்களில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், மாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளிட்ட பாபா பாஸ்கர், தற்போது ’ஜகமே தந்திரம்’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’ஜகமே தந்திரம்’ டிரைலரில் ஒரு நடன காட்சியில் பாபா பாஸ்கர் இருப்பதை ரசிகர்கள் கவனித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz