close
Choose your channels

'குக் வித் கோமாளி' பவித்ராவின் முதல் படம் குறித்த முக்கிய தகவல்!

Wednesday, March 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு மட்டுமின்றி தினந்தோறும் ஹாட்ஸ்டாரில் பழைய நிகழ்ச்சிகளையும் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்து வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ’குக்’களும் சரி, கோமாளிகளும் சரி நான்ஸ்டாப்பாக காமெடி செய்து வருவதே இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணமாகும். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ’குக்’களில் ஒருவராக இருக்கும் பவித்ரா லட்சமி, மலையாளத்தில் உருவாகிய ‘உல்லாசம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வந்தார். இளம் மலையாள நடிகர் ஷேன் நிகம் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. சின்னத்திரையில் பார்த்த பவித்ரா லட்சுமியை பெரிய திரையில் காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடிப்பதற்காக பவித்ரா லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படங்கள் குறித்த அறிவிப்புகளும் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ், ஷிவாங்கி, தர்ஷா குப்தா, அஸ்வின் உள்பட ஒரு சிலர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பவித்ரா லட்சுமியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.