close
Choose your channels

எங்க பரம்பரையிலேயே முதல் கார், அம்மா அழுதுட்டாங்க: 'குக் வித் கோமாளி' புகழ் வீடியோ!

Monday, March 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், சமீபத்தில் சொந்த சம்பாதிப்பில் கார் வாங்கினார் என்பதும் இந்த காருடன் அவர் நின்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தான் வாங்கிய கார் குறித்த வீடியோவை நெகழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறிய போது ’தன்னுடைய பரம்பரையிலேயே முதல் முறையாக கார் வாங்கி இருப்பதாகவும், கார் வாங்கி இருப்பதாக தன்னுடைய அம்மாவிடம் சொன்னதும் அவர் கண் கலங்கி விட்டார் என்றும், என்னுடைய பையன் கார் வாங்கி விட்டான் என்று பெருமையாக அவர் கூறிக் கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக கலைஞர்களிடம் நான் கார் வாங்கியதை கூறியபோது, அனைவரும் மகிழ்ச்சி அடைந்து எனக்கு வாழ்த்து கூறினார்கள் என்றும் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்றும் கோடி நன்றிகள் என்றும் புகழ் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.