close
Choose your channels

புதுக்காரில் சிவகாசி சென்ற புகழ்: என்ன ஆச்சுன்னு வீடியோவை பாருங்கள்!

Thursday, March 4, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ், புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் என்று கூறலாம் புகழின் காமெடிக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் புதிய கார் ஒன்றை புகழ் வாங்கிய செய்தி வெளியானபோது தாங்களே கார் வாங்கியது போல் பல ரசிகர்கள் கொண்டாடினார்கள். எனது பரம்பரையிலேயே முதல் கார் என்று புகழ் நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோவும் வைரலானது.

இந்த நிலையில் தனது புதிய காரில் புகழ் சமீபத்தில் சிவகாசி சென்றபோது அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டனர். இது குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள புகழ், ‘சிவகாசி மக்களே’ என்று கூறியுள்ளார். புகழின் காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz