புதுசா பண்ண போறோம்.. பெருசா பண்ணப்போறோம்: 'குக் வித் கோமாளி' சீசன் 6 அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியில் ஒளிபரப்பான புகழ் பெற்ற குக்கிங் காமெடி ஷோ ‘குக் வித் கோமாளி’ தற்போது தனது ஆறாவது சீசனை நோக்கி பயணிக்கிறது. ஐந்து வெற்றிகரமான சீசன்கள் நிறைவடைந்த நிலையில், புதிய சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், சீசன் 6 ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பெரும்பான்மையான ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோரின் நகைச்சுவை நடுவர் தன்மையுடன் சிறப்பாக நடைபெற்றன. ஆனால் ஐந்தாவது சீசனில், வெங்கடேஷ் பட் விலக, மாதம்பட்டி ரங்கராஜ் அவருக்குப் பதிலாக இணைந்தார்.
மேலும் ஐந்தாவது சீசனில் சில சர்ச்சைகளும் எழுந்தன. குறிப்பாக, போட்டியாளர் பிரியங்கா மற்றும் தொகுப்பாளினி மணிமேகலை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இந்த மாற்றம், ரசிகர்களிடம் குறிப்பிடத்தக்க வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 6 ப்ரோமோ வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய சீசனில், ஏற்கனவே கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, சரத் மற்றும் ராமர் மீண்டும் வருவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதி கோமாளிகள் யார்? புதிய போட்டியாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விஜய் டிவியால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com