'குக் வித் கோமாளி' சீசன் 6 பிரமாண்டமான தொடக்க விழா.. தேதியை அறிவித்த விஜய் டிவி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ஏற்கனவே 5 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தற்போது ஆறாவது சீசன் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இந்த நிலையில், ஆறாவது சீசன் தொடங்கும் தேதியை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். ஐந்தாவது சீசனில், வெங்கடேஷ் பட் விலகினார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இடம் பெற்றார். அது மட்டுமின்றி, ஐந்தாவது சீசனின் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், தற்போது ஆறாவது சீசன் தொடங்க இருக்கிறது. இதில் ’பிக் பாஸ்’ போட்டியாளர் சௌந்தர்யா கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் புகழ், ராமர், சுனிதா, சரத் ஆகியோர் கோமாளிகளாக கலக்க உள்ளனர்.
அது மட்டும் இன்றி, ’புது ரூல்ஸ், புது ஜட்ஜ் என விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், ரங்கராஜ் மற்றும் தாமு அவர்களுடன் மூன்றாவது நடுவராக கௌஷிக் அவர்கள் இணைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ’கோமாளி’ நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மே 4ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8 மணிக்கு பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல், ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments