நான் டைவர்ஸ் செய்யப்போறேன்.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகாவின் வீடியோ

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ருதிகா டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பரத் உடனான நட்பை டைவர்ஸ் செய்யப் போகிறேன் என்று காமெடியாக கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றினார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றபோது துள்ளி குதித்தார் என்றும் அந்த காட்சிகள் இன்னும் பார்வையாளர்களின் மனதில் பதிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது வீட்டிற்கு கோமாளிகளில் ஒருவரான பரத் உள்பட தனது நண்பர்களை அழைத்து ஸ்ருதிகா விருந்து கொடுத்துள்ளார். அப்போது திரையில் ஸ்ருதிகா சூர்யாவுடன் நடித்த ’ஸ்ரீ’ என்ற திரைப்படம் ஓடிய போது அவர் மிகவும் வெட்கப்பட்டார்.

இந்த படத்தை தயவு செய்து யாரும் பார்க்காதீர்கள், இந்த படத்தை பார்த்தால் எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த ரசிகர்கள் எல்லாம் போய்விடுவார்கள் என்று கூறினார். அப்போது பரத் வேண்டுமென்றே ’இது என்ன சீன், எதற்காக படுத்து இருக்கிறீர்கள்? எதற்காக சூர்யாவை கட்டிப்பிடிக்கிறீர்கள் என்றெல்லாம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் கடுப்பான ஸ்ருதிகா, ‘ நான் பரத்துடன் உள்ள நட்பை டைவர்ஸ் செய்யப் போகிறேன் என காமெடியாக கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஸ்ருதிகாவின் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? 50 வயது மணிரத்னம் பட நடிகை விளக்கம்!

 மணிரத்னம் படத்தில் நடித்த 50 வயது நடிகை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வாரம் டபுள் எவிக்சனா? யார் யார் வெளியேற வாய்ப்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் ஒருவர்

வித்தியாசமான மேக்கப்பில் ரம்யா பாண்டியன்.. குவியும் லைக்ஸ்

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு போட்டோஷூட் புகைப்படங்களுக்கும்

நாய் இல்லாத வீடில்ல, நாய் இல்லாத நாடு இல்ல, நாய் இல்லாத உலகம் இல்லை: 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' டிரைலர்

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவான 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'  என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து இந்த படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி உலகம்

என் இதயத்தை கண்டுபிடித்துவிட்டேன்': வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட சன் டிவி சீரியல் நடிகை

சன் டிவி சீரியலில் நடித்த நடிகை தனது இதயத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறி வருங்கால கணவரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.