close
Choose your channels

விஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்: வைரலாகும் வீடியோ

Wednesday, February 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் விஜே ஆக பணிபுரிந்து கொண்டிருக்கும் மணிமேகலை கடந்த 2017 ஆம் ஆண்டு டான்ஸ் மாஸ்டர் உசேன் என்பவரை திருமணம் செய்தார்

இந்த நிலையில் இன்று நேற்று விஜே மணிமேகலை தனது வீட்டில் உள்ள சமையல் அறையில் சாப்பாடு சமைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென குக்கர் வெடித்ததால்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரது கணவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த வீடியோவில் குக்கர் வெடித்ததால் அதிலுள்ள சாதம் சமையல் அறை முழுவதும் சிதறி இருக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவில் விஜே மணிமேகலை கூறியபோது ’நான் சரியான அளவுடன் தான் அரிசியும் தண்ணீரும் போட்டேன். ரொம்ப நேரமாக விசில் வரவே இல்லை இதனை அடுத்து திடீரென குக்கர் வெடித்து உள்ளது. என்ன தவறு நடந்தது என்று எனக்கு தெரியவில்லை

வழக்கமாக மதிய சாப்பாடு செய்து கொடுக்க ஒரு பெண் வருவார். அவர் இன்று வரவில்லை என்பதால் நானே முயற்சி செய்தேன். என்னுடைய முதல் முயற்சியே இப்படி சொதப்பி விட்டது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.