close
Choose your channels

மீண்டும் நாயகனாக 'குக் வித் கோமாளி' அஸ்வின்.. இயக்குனர் யார் தெரியுமா?

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் சமீபத்தில் வெளியான ’செம்பி’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்த அஸ்வின் அதன் பின் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிலையில் அஸ்வின் நடித்த ’என்ன சொல்லப் போகிறாய்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான ’செம்பி’ திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அரவிந்த் சீனிவாசன் என்பவர் இயக்க உள்ளார். ஏற்கனவே அருள்நிதி நடித்த ’தேஜாவு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜென்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.